2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளான புதிதாக 28 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு கடந்த மாதம் சென்ற 23 இத்தாலிய சுற்றுலாப்பயணிகளில் 15 பேரும், அவர்களுடன் பயணித்த ஒரு இந்தியரும் COVID-19 தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே COVID-19-ஆல் இந்தியாவில் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது இவ்வாறாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, குறித்த 28 பேரில் ஆறு நோயாளர்கள், கடந்த திங்கட்கிழமை COVID-19 தொற்றுக்குளாகியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 45 வயதான டெல்லி நபர் குடும்ப உறுப்பினர்கள் என ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த டெல்லி நபர் அண்மையில் இத்தாலிக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கு அடுத்தாக இத்தாலியிலேயே COVID-19 வேகமாகப் பரவி வருகிறது.

இதுதவிர, சர்வதேச விமானங்களிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் COVID-19 தொற்றுக்குள்ளான கேரளாவைச் சேர்ந்த முதல் மூன்று பேரும் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .