2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்?

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

 இந்தியா நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமெனவும் மக்கள்

தொகைக்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுந்து வருகின்றன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக  ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

முதலில் நாடாளுமன்றத்துக்கு 2022-ம் ஆண்டுக்குள் புதிய கட்டடம் கட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த கட்டடம் மக்களவை, மாநிலங்களவை என இரு சபையின் 900 எம்.பி.க்கள் அமர போதுமானதாகவும், 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும் கட்டப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற கட்டடத்தை முக்கோண வடிவத்தில் கட்டி முடிப்பதற்கு

ஹமதாபாத்தைச் சேர்ந்த எச்.எஸ்.பி. டிசைன் நிறுவனம் யோசனை தெரிவித்து

இருக்கிறது. இந்த நிறுவனம் மாதிரி வரைபடம் ஒன்றையும் தயார் செய்து அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த யோசனை ஏற்கப்பட்டால், முக்கோண வடிவ நாடாளுமன்ற கட்டடம், தற்போதுள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு அடுத்து அமையும்.

இந்திரா காந்தி தேசிய கலை மையம், இட மாற்றம் செய்யப்படும்.

தேசிய ஆவண காப்பகம் மறுவடிவமைப்பு செய்யப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .