2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

‘இந்த ஞானம் முன்பே வராதது ஏன்’

Editorial   / 2020 ஜனவரி 16 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் இடைத்தேர்தலுக்கு முன்பே ஞானோதயம் வராதது ஏன் என திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) பொருளாளர் துரைமுருகனுக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கீழ்ச்சபை உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்காதது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கையால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

பின்னர் இரண்டு நாட்களிலேயே ஒரே குடும்பத்துக்குள் சிறுசிறு பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம் என மற்றொரு பேட்டி கொடுத்து பல்டி அடித்தார் கே.எஸ். அழகிரி. இருந்தாலும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை உறுதி செய்யும் வகையில், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தி.மு.க புறக்கணித்தது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டச்பையின் உறுப்பினருமான துரைமுருகன் அளித்த பேட்டியில், "தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை. அவர்கள் விலகுவதால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் கூட அது எங்கள் வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு வாக்கே இல்லை" என்றார்.

துரைமுருகன் பேசிய இந்த காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், "வேலூர் லோக்சபா இடைத்தேர்தலுக்கு முன்பே இந்த ஞானோதயம் ஏன் வரவில்லை" என கேள்வியெழுப்பியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .