Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
விபத்தொன்றில் இரண்டு கைகளை இழந்தாலும் விடாமுயற்சியாலும்
தன்னம்பிக்கையாலும் பெண் ஒருவர்
ஹிந்தி மொழி ஆசிரியராகி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பொலிஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (62).
கட்டடத் தொழிலாளி. இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன். இதில் மூத்த மகள் ஜீவா (38). இவர், செவிலியர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, கடந்த 2005ஆம் ஆண்டு
விழுப்புரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தார்.
ஒரு நாள், அவர் இரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மின் தடை ஏற்பட்டதால் மின்பிறப்பாக்கியை இயக்கியுள்ளார்.
இதில் ஏற்பட்ட விபத்தில் அவரது இரண்டு கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மூன்று மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜீவா, இரு கைகளையும் இழந்த நிலையில் வீடு திரும்பினார். பெரிய அளவு வசதி இல்லாவிட்டாலும் எளிய
குடும்பமாக அமைதியான முறையில் வாழ்ந்து வந்த செல்வராஜின் குடும்பத்துக்கு அது பேரிடியாக இருந்தது.
தொடக்கத்தில் சோர்ந்திருந்தாலும் நாளடைவில் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்ட ஜீவா, தன் வீட்டின் அருகில் உள்ள இந்தி
பிரசார சபாவில் சேர்ந்து பயின்றிருக்கிறார். அதில் அவருக்கு ஆர்வம் வர, ஹிந்தி மொழிப் பாடத்தில் இளங்கலை (பி.ஏ) வரை பயின்றுள்ளார்.
59 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago