2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

’கனவில் கூட முதலமைச்சர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்க மாட்டார்’

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலுள்ள நேரு உள்ளக அரங்கத்தில், நடிகர் கமல் ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று நடைபெற்ற “கமல் 60” நிகழ்ச்சியின்போதே மேற்படி கருத்தை ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ரஜினிகாந்த், “முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, நான்கு அல்லது ஐந்து மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது. இன்று நடக்கிறது. நாளையும் நடக்கும்.

கமலும், நானும் வெவ்வேறு இடத்துக்கு போனாலும், எங்களது சித்தாந்தம், கொள்கை மாறினாலும் நட்பு எப்போதும் போல் தொடரும். எங்கள் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .