Editorial / 2019 நவம்பர் 10 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாகை சிறுமி இறப்பு தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(30 ) என்ற இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியை சேர்ந்த 10 வகுப்பு மாணவி, தோப்பு ஒன்றில் இருந்து நேற்று (09) மாலை கழுத்து, தலை ஆகிய இடங்களில் இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமத்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டதில் சிறுமி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிறுமி இறப்பு தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(30 ) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றதாக கல்யாணசுந்தரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கல்யாணசுந்தரம் அளித்த வாக்குமூலத்தில் ''நீண்ட நாட்களாக சிறுமியை கண்காணித்து வந்தேன். நேற்று மாலை சிறுமி வீட்டிற்கு பின்புறம் செல்லும்பொழுது அவரை பின் தொடர்ந்து அவரது வாயை பொத்தி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்றேன். அங்கே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன். அப்போது சிறுமி கத்தியதால் அவரது தொண்டையை நெரித்துக் கொலை செய்தேன்'' என தெரிவித்துள்ளார்.
காயமடைந்து கிடந்த சிறுமியை காட்டுப்பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றவர்களில் கல்யாணசுந்தரமும் இருந்துள்ளார். தங்கச்சியை இப்படி செய்துவிட்டார்களே என கதறி அழுத கல்யாணசுந்தரம் மீது அப்போது யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago