2021 ஜனவரி 20, புதன்கிழமை

மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கள்ளக்குறிச்சி அருகே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை வாகனத் தணிக்கைக்காக, மோட்டார் சைக்கிளை பொலிஸார் நிறுத்த முயன்றபோது, அதில் வந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்விபத்துக்கு காரணமான பொலிஸார் மீது நடவடிக்கை கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் வடக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யம்பெருமாள் மனைவி அய்யம்மாள் (63). இவரது மகன் செந்தில்குமார்(29). இவா், தனது தாய் அய்யம்மாளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கி மதியம் சுமார் 12.15 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள மாணவியா் விடுதி முன்பாக, கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) வேல்முருகன் தலைமையில் பொலிஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, செந்தில்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார்   நிறுத்த முற்பட்டார். இதில், பொலிஸ்காரரின் கை அய்யம்மாள் மீது பட்டதாகத் தெரிகிறது. இதனால் அய்யம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கு திரளானோர் கூடினா்.

சம்பவம் பற்றி அறிந்த காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன், காவல் ஆய்வாளா் தங்க.விஜயகுமார் மற்றும் பொலிஸார்  விரைந்து , அய்யம்மாளை  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அய்யம்மாள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .