Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்திலுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஒரு பொலிஸ் நிலையம் ஒன்றின் வெளியே, 27 வயதான பெண்ணொருவரை வன்புணர்ந்து, கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் நால்வரை தங்களிடம் கையளிக்குமாறு கோரி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று கூடியிருந்தனர்.
ஹைதரபாத்திலிருந்து ஏறத்தாழ 50 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள நகரமான ஷட்நகரில் கால்நடை வைத்தியரான குறித்த பெண்ணின் சிதைவடைந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிலிப்பர்களை எறிந்து பொலிஸாருடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சடலம் இருக்கும் நிலை காரணமாக மருத்துவ ஆதாரத்தைப் பெறுவது கடினம் எனத் தெரிவித்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர் வன்புணரப்பட்டார் என்ற கருதுகோளில் தாங்கள் பணியாற்றுவதாகக் கூறியுள்ளனர்.
இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் வலியுறுத்தப்படும் விரைவான விசாரணையொன்றை முகங்கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நெடுஞ்சாலையொன்றின் கட்டணஞ் செலுத்தும் மய்யமொன்றுக்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை விட்ட பின்னர் மேற்குறிப்பிட்ட பெண் கடந்த புதன்கிழமை இரவு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், குறித்த பெண் இல்லாதபோது டயரொன்றின் காற்றை நான்கு நபர்களும் குறைத்ததாகவும், பின்னர் அவர் வந்தபோது உதவி செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021