2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

அமித்ஷாவை எடப்பாடி இன்று சந்திக்கிறார்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 2 நாள்கள் பயணமாக, இன்று திங்கள்கிழமை டில்லி புறப்பட்டு செல்கிறார்.உள்துறை அமைச்சர்  அமித் ஷாவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார்.

பிரதமர்  நரேந்திர மோடியை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற் காக பிரதமருக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.

டில்லி செல்லும் முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கு தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்குகிறார். செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .