Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் அரச அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவது அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு ஆறாது இடத்திலுள்ளது. கடந்தாண்டு 52 சதவீதமாக இருந்த இலஞ்சத்தின் அளவு, நடப்பாண்டில் 62 சதவீதமாக அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
அரச அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் இலஞ்சம் கொடுப்பது தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஆய்வுவொன்றை நடத்தியது. கடந்த மாதம், இம்மாதங்களில் பொதுமக்கள் அளித்த இலஞ்சத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், அரச அலுவலகங்களில் அதிக அளவில் இலஞ்சம் பெறப்படும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், பீஹார் இரண்டாமிடத்திலும், உத்தரப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. நான்காமிடத்தில் தெலுங்கானா, ஐந்தாமிடத்தில் கர்நாடாக, ஆறாமிடத்தில் தமிழ்நாடு, ஏழாமிடத்தில் ஜார்க்கண்ட், எட்டாமிடத்தில் பஞ்சாப் ஆகியன காணப்படுகின்றன.
இதேபோன்று இலஞ்சம் குறைவாக உள்ள மாநிலங்களில் டெல்லி முதலிடத்திலும், ஹர்யானா இரண்டாமிடத்திலும், குஜராத் மூன்றாமிடத்திலும், மேற்கு வங்கம் நான்காமிடத்திலும், கேரளா ஐந்தாமிடத்திலும், கோவா ஆறாமிடத்திலும், ஒடிசா ஏழாமிடத்திலும் உள்ளன.
சொத்து மற்றும் நில உரிமை மாற்றுவது தொடர்பான விவகாரங்களுக்காக அதிகம் இலஞ்சம் வாங்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில் 41 சதவீதம் இலஞ்சம் பெறப்படுகிறது. இலஞ்சம் அதிகம் பெறப்படும் துறைகளில் மாநகராட்சி இரண்டாவது இடத்தில் 19 சதவீதமாக உள்ளது. மூன்றாமிடத்தில் பொலிஸ் உள்ளது.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 62 சதவீதம் பேரில் 35 சதவீதத்தினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை இலஞ்சம் அளித்தவர்கள். 27 சதவீதம் பேர் ஒருமுறை அல்லது இரண்டு முறை இலஞ்சம் கொடுத்தவர்கள் ஆவர்.
4 minute ago
9 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
3 hours ago
5 hours ago