Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி இம்மாதம் 27, 30ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான புதிய தேர்தல் அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலுக்கு ஆதரவு தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 minute ago
7 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 hours ago
27 Mar 2026