Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் புதிய தொடக்கமாகவும், தங்கள் கட்சியினருக்கு புதிய அனுபவமாகவும் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் என்ற இக்கட்டான சூழலிலும் 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம்.
நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகர்ந்திருக்கிறோம். 'மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை' என்பது அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல.
அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை,மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .