A.K.M. Ramzy / 2021 ஜனவரி 13 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். பாஜக சார்பில் நடக்கும் பொங்கல் விழாவிலும், ‘துக்ளக்’ ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.
‘துக்ளக்’ வார இதழின் 51ஆவது ஆண்டு நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நாளை 14ஆம் திகதி நடக்கிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாபங்கேற்பதாக அறிவிக்கப்பட் டது. ஆனால், அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டு விட்டது.
அவருக்கு பதிலாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். நாளை மாலை 4 மணிக்கு சென்னை வரும் நட்டாவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு சென்னை மேற்குமாவட்ட பாஜக சார்பில் மதுரவாயலில் நடக்கும் ‘நம்ம ஊரு பொங்கல்’ விழாவில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ‘துக்ளக்’ ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். இரு நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு நட்டா டெல்லி திரும்புகிறார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago