Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
A.K.M. Ramzy / 2020 ஜூலை 30 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரு,
கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தா லும் பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள்கள் விற்பனை
எந்த பிரச்சினையும் இன்றி நடந்து வந்தது.
கடந்த சில நாள்களாக பெங்களூருவில் கஞ்சா விற்ற 50இக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் போதைப்பொருள்கள் விற்ற 4 பேரை மத்திய குற்றப்பிரிவுபொலிஸார் கைது செய்திருந் தனர்.
அவர்களிடம் இருந்து போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பெங்களூரு பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அவற்றை பொலிஸ் அமைச்சர் பசவராஜ் பொம்மை, பொலிஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், மத்திய குற்றப்பிரிவு இணை பொலிஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் பார்வையிட்டனர்.
பின்னர் பொலிஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு சோழதேவனஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கபானவாராவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு
இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனையின் போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கேரள மாநிலத்தை சேர்ந்த சாகத் முகமது (வயது 24), அஸ்மல் (22), அஜின் வர்ஜிஸ் (21), நிதின் மோகன் (29) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தனர்.
கேரளாவை சேர்ந்த பிரபல போதைப்பொருள் விற்கும் நபருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தனர். அவர் மூலமாக டார்க் வெப்சைட் மூலமாக
போதைப்பொருள்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் 4 பேரும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். அதாவது ஒன்லைன் மூலமாகவே போதைப்பொருஒள்களை விற்றுள்ளனா.
குறிப்பாக தங்கும் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறி வைத்து போதைப்பொருள்களை 4 பேரும் விற்று வந்துள்ளனர்.
இதுதவிர பெங்களூரு நகரில் பப் மற்றும் மதுபான விடுதிகளுக்கு
போதைப்பொருள்களை வாடிக்கையாக விற்று பணம் சம்பாதித்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 2 ஆயிரம் எல்.எஸ்.டி, 110 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை
மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும்.
இவற்றில் எல்.எஸ்.டி. என்ற போதைப்பொருள் பேப்பர் போன்ற மாதிரியில் இருக்கும். இதனை அதிகஅளவில் வாங்கி 4 பேரும் விற்று வந்துள்ளனர்.
கைதான 4 பேர் மீதும் சோழதேவன ஹள்ளி பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
28 minute ago