Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜூலை 08 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
· முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.
· தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை இளம்பெண் விரும்பவில்லை.
· கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங் மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதை கண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவர் கோபம் அடைந்தார்.
காதலித்தபோது அந்த மாணவரும், அந்த பெண்ணும் பரிமாறிக் கொண்ட அந்தரங்க தகவல்கள், புகைப்படங்கள் மாணவனின் செல்போனில் இருந்தது. இதனால் அந்த பெண், மாணவனின் செல்போனில் உள்ள தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கும்படி மாணவனிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் நீக்கிவிடும்படி பலமுறை அந்த பெண் கேட்டபோது, மாணவன் தனது நண்பர்களிடம் அவற்றை காட்டியதாக கூறினார். மேலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களையும் வைத்திருப்பதை நினைத்து கவலைப்பட்ட அந்த பெண், தனது நெருங்கிய தோழியின் உதவியை நாடினார்.
தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. இந்த பிரச்சினையை தோழி தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து தோழி ஏற்பாட்டின்பேரில் 12 பேர் கும்பல் கடந்த ஜூன் மாதம் 30-ந் திகதி இளம்பெண்னின் முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவரை ஹெசரகட்டாவில் உள்ள ஏஜிபிலேஅவுட்டுக்கு காரில் கடத்தி வந்தனர்.
அங்குள்ள ஏரிக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தை கார் அடைந்தது. பின்னர் அந்த மாணவரை தரையில் உட்கார வைத்து, மற்றவர்கள் சுற்றி நின்று பிரம்பு கம்பால் இரக்கமின்றி அடிக்க தொடங்கினர். மேலும் முன்னாள் காதலி வாலிபரை நிர்வாணப்படுத்தி ஓட, ஓட விரட்டி தாக்கினார். பின்னர் அந்த இளம்பெண் தனது செல்போனில் அதை வீடியோவாக எடுத்தார்.
அப்போது அந்த பெண், அவரிடம் தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நீக்குமாறு கூறினார். அதற்கு அவர் அனைத்தும் செல்போனில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக பதிலளித்தார். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சந்தேகம் அடைந்து மாணவரின் செல்போனை வாங்கி அதில் இருந்த அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் நீக்கினார்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த முன்னாள் காதலன் இது குறித்து சோலதேவனஹள்ளி பொலிஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடத்தல் கும்பல் சேஷாத்ரிபுரத்தை சேர்ந்த சிவசங்கர் (20), கணபதிநகரை சேர்ந்த யஷ்வந்த் படேல் (20), நெலமனகலை சேர்ந்த ஹேமந்த் (18), டி.தாசரஹள்ளியை சேர்ந்த சல்மான் கான் (23), உல்லாலை சேர்ந்த ராகுல் (20), தேஜாஸ் (18), ஹெசரகட்டாவை சேர்ந்த ராகேஷ் (21) மற்றும் யஷ்வந்த்பூரைச் சேர்ந்த ஷஷாங்க் கவுடா (19) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள ஹேமந்த், சூர்யா மற்றும் விஷால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சல்மான் கான் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மற்றவர்கள் மாணவர்கள் ஆவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago