Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் -19 தடுப்புக்காக போடப்பட்ட அரசின் முடக்கத்தை மதிக்காமல் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால் அவர்களை திருப்பி அனுப்புவதில் பொலிஸார் தவித்தனர்.
இதனால் இன்று புதுச்சேரியில் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுச்சேரி சுற்றுலா பகுதியாக இருப்பதால் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.
கொவிட் -19 தாக்கப்பட்டவர்களும் புதுச்சேரிக்கு வந்து, சென்றிருக்கலாம் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ள னர்.
அவர்களுக்கு கொவிட் -19 பாதிப்பு இருந்திருந்தால், அவர்களுக்கு சேவை செய்த ஹோட்டல் ஊழியர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்த 515 ஊழியர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து, அவர்களைக் கண்காணித்து வருகின்றது.
மேலும் யாருக்கும் கொவிட் -19 தொற்று ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு 9 முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை முடக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த உத்தரவை புதுச்சேரி மக்களில் பெரும்பாலானோர் மதிக்கவில்லை.
கடைகள் மூடப்பட்டிருந்தாலும், நிறுவனங்களுக்கு விடுப்பு விடப்பட்டிருந்தாலும் மக்கள் அனைவரும் வழக்கம்போல் தெருக்களில் நடமாடி வந்தனர்.
நகரப் பகுதிகளில் கடைகள் மூடியிருந்தாலும் தேவையில்லாமல் பலரும் இருசக்கர வாகனத்தில் நகரைச் சுற்றி வந்தனர். அதை தடுத்த பொலிஸாரிடமும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரிக்கு வரும் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அதன் வழியாக வந்த எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
புதுச்சேரிக்குள் வர விடாமல் தடுத்ததால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025