Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 08, திங்கட்கிழமை
A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி;
உள்நாட்டில் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இதன்மூலம் பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து நாடு தன்னிறைவு அடைவதை நாங்கள் ஆதரித்து வருகிறோம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற வீடியோ கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:
2021-22ஆம் நிதியாண்டில் ரூ.70,221 கோடிக்கு உள்நாட்டில் இராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படும். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். மேலும் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
இந்திய இராணுவத்தை நவீனமயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 130 பில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய அரசு செலவிடவுள்ளது. அண்மையில் உள்நாட்டிலேயே 83 எல்சிஏ எம்கே1ஏ விமானங்களைத் தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.48 ஆயிரம் கோடியாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago