2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (09.04.2014)

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (09.04.2014)

மேடம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் அவசியம். அலைச்சல்கள் குறையும்.
அஸ்வினி : இன்பம்
பரணி : கவனம்
கிருத்திகை 1ஆம் பாதம் : அலைச்சல்


இடபம்
சுபவிரயம் உண்டு. குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. விருப்பங்கள் நிறைவேறும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம்
நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3 : மகிழ்ச்சி
திருவாதிரை: உதவிகள்
புனர்பூசம்: இன்பம்


கடகம்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் பெருமை வந்து சேரும். கைவிட்டுப்போன பொருள் மீண்டும் கிடைக்கும். வழிபாடுகளின் மூலம் வளர்ச்சி காணும் நாள்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம் : மகிழ்ச்சி
ஆயில்யம்: வளர்ச்சி


சிம்மம்
உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமண வாய்ப்புகள் கை கூடி வரும். வருங்கால நலன் கருதி சேமிப்புக்களை உயர்த்துவீர்கள்.
மகம்: பெருமை
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: சேமிப்பு


கன்னி
நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தொடர்புகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தனலாபம்


துலாம்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வர். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : வெற்றி
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: இன்பம்


விருட்சிகம்
மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து கிடைக்கப் பெறுவீர்கள்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: சாதனை
கேட்டை: இன்பம்


தனுசு
பம்பரமாக சுழன்று பணி புரிந்து பலரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். ஆலய வழிபாடுகளில் அக்கறை செலுத்த வேண்டும்.
மூலம்: இன்பம்
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மன அமைதி


மகரம்
இட மாற்றங்களால் இனிய மாற்றம் உண்டாகும். வருமானம் பெருக கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உற்சாகமும் சோர்வும் வந்து வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: துன்பம்


கும்பம்
வாய்ப்புக்கள் வாயில் தேடி வந்து சேரலாம். பணவரவு எதிர்பார்த்ததை விட இருமடங்காகும். பால்ய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : வரவு
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்


மீனம்
தன்னம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபடும். இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். வெளியுலகத் தொடர்புகள் விரும்பும் விதத்தில் அமையும்.
பூரட்டாதி 4: தன்னம்பிக்கை
உத்திரட்டாதி : மகிழ்ச்சி
ரேவதி : இன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X