Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (09.06.2011)
இன்று கர வருடம் வைகாசி மாதம் 26ஆம் நாள் (09.06.2011) வியாழக்கிழமை. சித்தம் மேல் மரண யோகமும் அஷ்டமி திதியும் பூரம் நட்சத்திரம் காலை 11.08 மணிவரை, பின்பு உத்திரம்.
ராகு காலம் : காலை 1.30 முதல் 3.00 மணிவரை.
எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.
நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 மணிவரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணிவரை.
மேடம்
தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், தீய நண்பர்களினால் சில சிக்கல்கள் ஏற்படும், திருடர்களிடன் மிக கவனமாக இருப்பது நல்லது.
அஸ்வினி: அவதானம்
பரணி: விரயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
இடபம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பெண்களுடன் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும், பிறரின் பிரச்சினைகளினால் துன்பம்.
கிருத்திகை 2, 3, 4: மனஸ்தாபம்
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: சஞ்சலம்
மிதுனம்
புதிய வேலை தொடர்பான பயணங்கள் செல்லுதல், இசையில் ஆர்வம் அதிகரிக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: பிரயாணம்
புனர்பூசம்: மனஅமைதி
கடகம்
பணவரவு ஏற்படும், மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளலாம், புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுதல்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: புதிய வழி
ஆயில்யம்: லாபம்
சிம்மம்
பிறரின் பேச்சைக் கேட்டு செயல்படுவதை தவிர்க்கவும், செயல்களில் பதற்றம் ஏற்படும், மனதில் சஞ்சலங்கள், கவலைகள் தோன்றும்.
மகம்: நாவடக்கம்
பூரம்: தவறுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: நிம்மதியின்மை
கன்னி
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், குடும்பத்தில் நல்ல காரியங்கள் கைகூடும், நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதி
அஸ்தம்: அனுசரணை
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆரோக்கியம்
துலாம்
சில இடமாற்றங்கள் ஏற்படும், வெளிதேச பயணங்கள் செல்ல நேரிடும், பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனஅமைதி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: அக்கறை
விருட்சிகம்
பெரியார்களின் ஆதரவு நம்பிக்கை தரும், அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுதல்.
விசாகம் 4: அனுகூலம்
அனுசம்: லாபம்
கேட்டை: முயற்சி
தனுசு
அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனதில் பயம் உணர்வு ஏற்படும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
மூலம்: குழப்பம்
பூராடம்: கலக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பின்னடைவு
மகரம்
மேல் அதிகாரிகளினால் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும், புதிய தகவல் கிடைக்கும், நவீன நுட்பங்களை பயன்படுத்துவதால் லாபம்.
உத்திராடம் 2, 3, 4: உதவி
திருவோணம்: நற்செய்தி
அவிட்டம் 1, 2: தொடர்பு
கும்பம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல், பகைவர்களினால் குழப்பங்கள் ஏற்படக்கூடும்.
அவிட்டம் 3, 4: தேகசுகம்
சதயம்: ஆசீர்வாதம்
பூரட்டாதி 1, 2, 3: வெறுப்பு
மீனம்
புதிய நுட்பங்களை மேம்படுத்தி வெற்றி அடையலாம், பெரியார்களின் அறிவுரைகள் நல்வழி தரும், பணவரவுகள் ஏற்படும்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: முயற்சி
3 minute ago
10 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
38 minute ago