2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (20.04.2014)

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (20.04.2014)

மேடம்
பணத்தட்டுப்பாடுகள் காணப்படும். விருந்தோம்பல்களில் கலந்து கொள்வீர்கள். உடல் உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய் உண்டாகும்.
அஸ்வினி : செலவு
பரணி : மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
தேவையில்லாத பயங்கள் உண்டாகும். வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உடல் சோர்வு உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : பயம்
மிருகசீரிடம் 1, 2: அசதி


மிதுனம்
பணியில் சில சிரமங்கள் உண்டாகும். பண விடயத்தில் கவனமாக இருப்பது அவசியம். நோய்த் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: சிக்கல்
புனர்பூசம்: பயம்


கடகம்
பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். உறவினர்கள் வகையில் சுப செய்திகள் வந்து சேரும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : சாதனை
ஆயில்யம் : இன்பம்


சிம்மம்
நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் நஷ்டங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
மகம்: துன்பம்
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்கள்


கன்னி
புதிய வியாபார ஒப்பந்தங்களுக்காக அலைச்சல் படவேண்டியிருக்கும். பெண்கள் சுய தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவார்கள். சில முக்கிய பணிக்காக உங்கள் சேமிப்புக்கள் குறையும்.
உத்திரம் 2, 3, 4: அலைச்சல்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்


துலாம்
உடல் சோர்வு உண்டாகும். சில வகையில் திருடர்பயம் ஏற்படும். இதனால் மனதளவில் சிறிது அலைச்சல் காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சிரமம்
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: குழப்பம்


விருட்சிகம்
தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: சாதனை
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
பேச்சுக்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். கை, கால்களில் வலி உண்டாகும். ஆலய தரிசனம் சென்று வருவீர்கள்.
மூலம்: கஷ்டம்
பூராடம்: நோய்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்


மகரம்
தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணத்திற்கு சில தட்டுப்பாடுகள் காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: கஷ்டம்
அவிட்டம் 1, 2: வெற்றி


கும்பம்
வேலையில் சில தவறுகள் உண்டாகும். மனதளவில் துக்கம் காணப்படும். எந்த ஒரு விடயத்தையும் மனம் இன்றியே செய்து முடிப்பீர்கள்.
அவிட்டம் 3, 4: தோல்வி
சதயம் : துக்கம்
பூரட்டாதி 1, 2, 3: அலைச்சல்


மீனம்
தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த  பணம் கைக்கு வந்து சேரும். சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.
பூரட்டாதி 4: ஆர்வம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--