Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (28.09.2011)
இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 11ஆம் நாள் (28.09.2011) புதன்கிழமை. மரண மேல் சித்த யோகமும் பிரதமை திதியும் ஹஸ்தம் நட்சத்திரம் மாலை 04.39 மணிவரை பின்பு சித்திரை.
ராகு காலம்: காலை 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 01.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வினி: நன்மை
பரணி: மாற்றங்கள்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
தொழில் முன்னேற்றத்தில் சிறு பாதிப்புக்கள் ஏற்படுதல், மனக் கவலைகள் ஏற்படும், அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: தடைகள்
ரோகிணி: துயரம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: விரயம்
மிதுனம்
தூய்மையான ஆடை அணிதல், புண்ணிய காரியங்களில் ஈடுபடுவதால் மன அமைதி, குடும்பத்தில் சகோதரர்களின் அந்நியோன்யம் பலப்படும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: சுபம்
திருவாதிரை: ஒற்றுமை
புனர்பூசம்: வழிபாடு
கடகம்
காணாமல் போன பொருள் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்;பதால் மனஸ்தாபம், மனக் குழப்பங்கள் ஏற்படும்.
புனர்பூசம்: கவலை
பூசம்: சோர்வு
ஆயில்யம்: பகை
சிம்மம்
சுற்றுலாப் பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், பெண்களின் உதவி கிடைக்கும், சுவையான உணவு உண்ணலாம்.
மகம்: சலுகை
பூரம்: சந்தோஷம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆகாரம்
கன்னி
பணவரவு ஏற்படும், பெரியோர்களின் அறிவுரைகள் நல்வழி நடத்தலை ஏற்படுத்தும், கடின உழைப்புடன் செயற்படுவதால் முன்னேற்றம்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: இலாபம்
அஸ்தம்: ஆலோசனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: வழிகாட்டல்
துலாம்
அரசாங்க சலுகை தேடி வருதல், புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் நடைமுறைபடுத்தல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புத்துணர்ச்சி
சுவாதி: மன அமைதி
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: வேலைவாய்ப்பு
விருட்சிகம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், குலதெய்வ வழிபாடுகள் நன்மை தரும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல்.
விசாகம் 4ஆம் பாதம்: விசித்திரம்
அனுசம்: பொறுமை
கேட்டை: நன்மை
தனுசு
புதிய பிரயாணங்கள் செல்வதால் அனுகூலம், சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: மாற்றங்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: அவதானம்
மகரம்
நவீன நுட்பங்களை கையாண்டு மேன்மை அடையலாம், உடல் உபாதைகள் வந்து நீங்கும், மனதால் அலைச்சல்
உத்திராடம் 2, 3, 4: வெற்றி
திருவோணம்: குழப்பம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: நோய்கள்
கும்பம்
மனதில் கவலைகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், தனவரவு ஏற்படும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சதயம்: அந்நியோன்யம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: வரவு
மீனம்
தொலைந்த பொருள் கிடைத்தல், தியானங்கள் வழிபாடுகள் மன ஆறுதல் தரும், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: பொறுமை
உத்திரட்டாதி: சுபம்
ரேவதி: இறை நம்பிக்கை
7 minute ago
11 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
39 minute ago
46 minute ago