2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (10.06.2020) மதிப்பு உயரும் நாள்!

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் ஒரு பெரிய பொறுப்புகள் தேடி வரும். 

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்  சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.  உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். 

கடகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கனவு நனவாகும் நாள்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மதிப்பு உயரும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததை போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் எல்லாம் தவறாக முடியும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். சகோதரர்களிடையே பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

மீனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--