Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 30 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. திடீர் யோகம் கிட்டும் நாள்.
மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். கனவு நனவாகும் நாள்.
கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். உழைப்பால் உயரும் நாள்.
சிம்மம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தைரியம் கூடும் நாள்.
கன்னி: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். மகிழ்ச்சியான நாள்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு கோபத்திற்கு ஆளாவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அதிகாரிகள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள்.
மகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அந்தஸ்து உயரும்நாள்.
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.
4 minute ago
12 minute ago
13 Sep 2025
13 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
13 Sep 2025
13 Sep 2025