2021 ஜனவரி 20, புதன்கிழமை

'அமெரிக்காவுடன் இனி போர்நேரச் சட்டம்'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 12 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுடன் இதுவரை காணப்பட்ட ஒரேயொரு தொடர்பாடல் முறைமையான நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் தொடர்பு கொள்வதையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளதாக, வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னை கறுப்புப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தமைக்குப் பதிலளிக்குமுகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரியாவால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பிரஜைகள் விவகாரம் உள்ளிட்ட அமெரிக்காவுடனான ஏனைய விடயங்கள் அனைத்தும், போர்நேரச் சட்டங்களின்படியே கையாளப்படும் எனவும், அந்நாடு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, கொரியத் தீபகற்பத்தில் தாட் ஏவுகணைப் பாதுகாப்புக் கட்டமைப்பை முன்னகர்த்தும் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மீதும் தென்னாபிரிக்கா மீதும் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதைத் தவிர, இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, வடகொரியாவின் அணுவாயுதத் தளத்தில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையை, செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுவதாக, வடகொரியாவைக் கண்காணிக்கும் அமைப்பொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .