2021 மே 06, வியாழக்கிழமை

அல்-கொய்தாவிலிருந்து பிரிந்தது சிரிய நுஸ்ரா முன்னணி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 29 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுஸ்ரா முன்னணி என அறியப்படுகின்ற சிரிய ஜிஹாதி குழுவான ஜபாத் அல்-நுஸ்ரா, அல்-கொய்தாவிலிருந்து பிரிவதாக அறிவித்துள்ளது.

குறித்த குழுவின் தலைவரான அபு மொஹம்மெட் அல்-ஜூலானி, தனது முதலாவது பதிவு செய்யப்பட்ட தகவலில், குறித்த குழுவின் புதிய பெயரானது ஜபாத் ஃபதா அல்-ஷாம் என இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளடங்கலான உலக சக்திகளினால் சிரியர்கள் மீது குண்டு போடுவதற்கு பயன்படுத்தப்பட்ட போலிப்பெயரை நீக்கும் பொருட்டே மேற்குறித்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக ஜூலானி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பதிலளித்துள்ள ஐக்கிய அமெரிக்கா, குறித்த குழுவை பயங்கரவாத அமைப்பாக நோக்கும் தமது பார்வையை மாற்றுவதற்கு ஒரு காரணமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த பிரிவுக்கு ஆதரவளிப்பதாக அல்-கொய்தா முன்னர் தெரிவித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .