Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்மேனியத் தலைநகர் யெரேவனில் உள்ள பொலிஸ் கட்டடமொன்றினுள்ளே தம்மை அடைத்துக் கொண்டிருந்த அனைத்து ஆயுததாரிகளும் சரணடைந்தமையைத் தொடர்ந்து, இரண்டு வார முற்றுகை முடிவுக்கு வந்துள்ளது.
சனிக்கிழமை (30) பிற்பகல் ஐந்து மணிக்கு முதல் சரணடையுமாறு பாதுகாப்பு படைகள் காலக்கெடு விதித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் (31) மேலும் ஒரு ஆயுததாரி பாதுகாப்புப் படைகளால் காயப்படுத்தப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கையை பாதுகாப்புப் படைகள் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து, ஆயுதக் குழுவின் உறுப்பினர்கள், தமது ஆயுதங்களை கீழே வைத்து, அதிகாரிகளிடம் சரணடைந்ததாக தேசிய பாதுகாப்பு சேவைகளின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டது. தவிர. இருபது பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago