Janu / 2026 மார்ச் 26 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு முடியும் வரை கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப் போவதில்லை கோதுமை மா நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஒருவேளை புத்தாண்டு காலத்திற்குப் பிறகு கோதுமை மாவின் விலை அதிகரித்தால், மீண்டும் பேக்கரி பொருட்களின் விலை உயர்த்தப்படுமா என அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு கோதுமை மாவின் விலை 10 ரூபாய் வரை அதிகரித்தால், பேக்கரி பொருட்களின் விலையைத் தாம் உயர்த்தப் போவதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, உள்ளூர் பேக்கரி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் வியாழக்கிழமை (26) அன்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அதிகரித்திருந்தது. இந்த விலை அதிகரிப்பிற்கான காரணங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
பேக்கரி உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் அடுப்புகளுக்கு டீசல் பயன்படுத்தப்படுவதால், எரிபொருள் விலை அதிகரிப்பு தங்களின் உற்பத்திச் செலவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உற்பத்தியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பாம் ஓயில் மூலம் தயாரிக்கப்படும் மாஜரின் உடல்நலத்திற்கு உகந்ததல்ல என்பதால், தமது உற்பத்திகளில் 'பட்டர்' பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக தற்போது நிலவும் தடைகளை நீக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதனைக் கவனத்தில் கொண்ட அமைச்சர், பாம் ஓயில் மற்றும் பட்டர் ஆகியவற்றின் விலைகள் பேக்கரி உற்பத்திகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பட்டருக்கான இறக்குமதி வரித் திருத்தம் குறித்துப் பரிசீலிக்கத் தமது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago