2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இந்திய உள்துறை செயலர் காஷ்மீர் செல்கிறார்

Super User   / 2010 ஜூலை 08 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், கூடுதல் இராணுவத்தினரை அங்கு பணியமர்த்தும் அவசியம் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்திய உள்துறைச் செயலர் ஸ்ரீநகர் செல்கிறார்.

 

கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் சிவிலியன்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்பட்டு வருகிறது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--