2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு; 3 இராணுவ வீரர்கள் உட்பட 9பேர் பலி

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய எல்லையில் இராணுவத்தினருக்கும்  பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 இராணுவ வீரர்களும் 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம், குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினருக்கும் வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கும் இடையே பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இதில் பயங்கரவாதிகள் தரப்பிலிருந்து அறுவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இராணுவ வீரர்கள் மூவரும் பலியாகியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--