2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனரை கொன்றமை தொடர்பில் ஐ.நா சீற்றம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலிய படைவீரர் ஒருவரால் பலஸ்தீனர் கொல்லப்பட்டமை தொடர்பாக தனது சீற்றத்தை ஐக்கிய நாடுகள் வெளிப்படுத்தியுள்ளது. மேற்படி இஸ்ரேலிய படைவீரர் கொலை செய்வது கமெராவில் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆதாரத்தின் மூலம் இது நீதிக்கு புறம்பான கொலை என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, படைவீரருக்கு எதிரான காணொளி ஆதாரம் தெளிவற்றது என இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (29) கூறியதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கோபம் அதிகரித்ததுடன், 21 வயதான அபேட் அல்-பட்டாஹ் யுஸ்ரீ அல்-ஷரீஃப், இம்மாத ஆரம்பத்தில் கொலை செய்யப்பட்டதுக்கு இஸ்ரேலிய இராணுவத்தை பொறுப்புக் கூறவைக்குமாறு இஸ்ரேலுக்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த காணொளியில் முன்னேறி வந்த படைவீரர், குறுகிய தூரத்தில் வைத்து பலஸ்தீனரின் தலையில் சுடுவதாகவும் அவர் உணர்ச்சியற்று நிலத்தில் வீழ்வதாகவும் இருந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .