2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஈராக்கில் பிரதமரின் பதவி விலகலிலும் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கியப் பிரதமர் அடெல் அப்டெல் மஹ்டியின் பதவி விலகல் அறிவிப்புக்கு மத்தியிலும் ஈராக்கிய தலைநகர் பக்தாத் மற்றும் தென் ஈராக்கில் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்கள் நேற்றும் தொடருகையில், மோசடியானதும், வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள அமைப்பை மாற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாண்டு ஒக்டோபர் மாத ஆரம்பம் முதல் வீதிகளை ஆர்ப்பாட்டங்கள் ஆக்கிரமித்த நிலையில், மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஈராக்கிய மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றிடமிருந்தான தரவுகளின்படி 420க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 15,000 பேர் காயமடைந்திருந்தனர்.

பக்தாத், ஷியா புனித நகரமான நஜாஃப், பிரதமர் அடெல் அப்டெல் மஹ்டி பிறந்த தென் ஈராக்கிய நகரமான நஸ்ரியாவில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையொன்றில் டசின் கணக்கானோர் கடந்த வாரம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே மேற்குறித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது சடுதியாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்தும், ஈராக்கிய உயர் ஷியா மதகுருவான பெரிய அயோத்துல்லா அலி சிஸ்டனியிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த பிரதமர் அடெல் அப்டெல் மஹ்டி, தனது இராஜினாமாவை நாடாளுமன்றத்திடம் அளிக்கவுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். எவ்வாறெனினும் ஆர்ப்பாட்டங்கள் குறைந்திருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .