2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

ஈராக் போர்: "சர்வதேசச் சட்டங்களை மீறியது பிரித்தானியா"

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2003ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுப்பை மேற்கொண்டதன் மூலம், சர்வதேசச் சட்டங்களை பிரித்தானியா மீறியதாக, அப்போது பிரதிப் பிரதமராக இருந்த ஜோன் பிறெஸ்கொட் நேற்றுத் தெரிவித்தார்.

ஈராக் போர் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, பிரித்தானியாவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அதில், போரை முன்னெடுப்பதற்கான முடிவு குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அந்தப் போர் சட்டரீதியானதா அல்லது சட்டரீதியற்றதா என்பது குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எனினும், தற்போது கருத்துத் தெரிவித்துள்ள பிறெஸ்கொட், அந்தப் போரின் சட்டரீதியான தன்மை தொடர்பான தனது பார்வையைத் தற்போது மாற்றிவிட்டதாகத் தெரிவித்ததோடு, அந்தப் போர் சட்டரீதியானதா என்பது தொடர்பாக அமைச்சர்கள் முழுமையாக ஆராய்வதைத் தடுத்ததாக, அப்போதைய பிரதமரான டொனி பிளேயர் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

"2004ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகமான கோபி அனான், ஈராக் போரின் பிரதான நோக்காக, ஆட்சி மாற்றமே காணப்படுவதால், அந்தப் போர் சட்டரீதியற்றது எனத் தெரிவித்திருந்தார். அவர் சரியாகச் சொன்னார் என்பதை, மிகுந்த கவலையுடனும் கோபத்துடனும் நான் இப்போது நம்புகிறேன்" என, பிறெஸ்கொட் தெரிவித்தார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .