2021 மே 06, வியாழக்கிழமை

எட்டு வயதுச் சிறுமியை சுட்டுக்கொன்ற பதினொரு வயது சிறுவன்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டெனேசி மாநிலத்தில், ஒரு நாய் தொடர்பான சண்டையில், அயலவரான எட்டு வயதுச் சிறுமியோருவரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் பதினொரு வயதுச் சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

மேற்படி சிறுவன் மீது திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுமி, தனது நாய்க்குட்டியை மேற்படி சிறுவனுக்கு காட்ட மறுத்தமையை அடுத்தே சனிக்கிழமை, தனது தந்தையின் துப்பாக்கியால் அந்தச் சிறுவன் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிறுமி மக்கைலா டையர் என அடையாளங் காணப்பட்டுள்ளதோடு, இருவரும் ஒரே பாடசாலைக்கே சென்றதாக சிறுமியின் தாயார் லதாஷா தெரிவித்துள்ளார். இந்தச் சிறுவன், தனது மகளை கேலி செய்வதாகவும், பெயரைக் கூப்பிடுவதாகவும், அவளுக்கென்றே இருந்ததாகவும்  எனினும் திடீரென்று அவளை சுட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

மேற்படி சிறுவன் ஒக்டோபர் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளான். இவ்வருடம் மட்டும் பதினொரு வயது மற்றும் அதற்கு குறைந்த 559 சிறுவர்கள் துப்பாக்கி வன்முறையால் காயப்பட்டோ, கொல்லப்பட்டோ உள்ளனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .