2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

எல் சல்வடோரில் 3,000க்கு மேற்பட்டோர் படுகொலை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல் சல்வடோரில், இவ்வாண்டின் முதற்பாதியில் 3,000க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (12) வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரிக்கும் ஜூனுக்குமிடையில் 3,058 கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக எல் சல்வடோர் அரசாங்கத்தின் தடயவியல் மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தின் இப்பகுதியை விட ஏழு சதவீதம் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது போரால் பாதிக்கப்பட்ட நாடுகள் தவிர, கொலை வீதம் அதிகரித்து காணப்பட்டு, உலகில் மிகவும் பயங்கரமான நாடுகளில் ஒன்றாக எல் சல்வடோர் காணப்படுகிறது.

பரவியிருக்கும் வன்முறைக்கான பெரும்பாலான காரணியாக பயங்கரமான குழுக்களே காணப்படுகின்றன. இதன் காரணமாகவே, பெரும்பாலோனோர், ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஏனைய அயல் நாடுகளுக்கும் குடிபெயருகின்றனர்.

இதேவேளை, குறிப்பிட நிறுவகத்தின் தகவலின்படி, இவ்வாண்டின் முதல் அரையாண்டுகளில் நிகழ்ந்த பெரும்பாலான கொலைகள், ஆண்டின் ஆரம்ப மாதங்களிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், குழுக்கள் மீது இராணுவ நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்த பின்னர், ஏப்ரல் மாதத்திலிருந்து குறித்த எண்ணிக்கையானது வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .