2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

‘ஐக்கிய இராச்சியத்துக்கான கதவு திறந்தேயுள்ளது’

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் பேரம்பேசல்கள் முடியாத வரையும், ஐக்கிய இராச்சியத்துக்கான, ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவு திறந்தேயுள்ளது என,  பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், நேற்று ம் (13) கூறியுள்ளார்.  

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான பேரம்பேசுதல்கள் ஆரம்பித்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, ஐக்கிய இராச்சியம் திரும்புவது கடினம் என்று, ஜனாதிபதி மக்ரோன் கூறியுள்ளார்.   

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை ஐக்கிய இராச்சியம் மாற்றினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் காணலாம் என ஜேர்மனி நிதியமைச்சர் வொல்ஃகாங் ஷைப தெரிவித்திருந்தார்.   

இந்நிலையில், ஷைபவின் மேற்படி கருத்துடன் இணங்குகிறீர்களா என, ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மேயுடனான இணைந்த செய்தியாளர் மாநாட்டில், ஜனாதிபதி மக்ரோனிடம் வினவப்பட்டபோதே, மேற்கூறப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.   

இதேவேளை, கருத்துத் தெரிவித்த பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் பேச்சுகள், அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கால அட்டவணை, எதிர்பார்த்தபடி உள்ளதாகக் கூறியுள்ளார்.  

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் பேச்சுவார்த்தைகளின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து, எந்தவோர் முன்னுரிமையையும் பிரதமர் மே எதிர்பார்க்கக் கூடாதென, ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X