2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

’ஐரோப்பாவிலிருந்து ஐ. அமெரிக்காவுக்கு பயணிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது’

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணிப்பது 30 நாள்களுக்கு கட்டுப்படுத்தப்பட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் நாளாந்த வாழ்க்கையின் அனைத்து மூலைகளையும் பாதிக்கும் வேகமாகப் பரவும் COVID-19-க்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறான அதிகரித்து வரும் அழுத்தத்துக்கு பதிலளிப்பாகவே மேற்படி நடவடிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார்.

இன்று நள்ளிரவுடன் ஆரம்பிக்கும் பயண ஒழுங்கானது பிரித்தானியாவுக்கோ அல்லது பொருத்தமான சோதனைகளுக்குட்படும் அமெரிக்கர்களுக்கு செல்லுபடியாகாது என ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவில் 1,311 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 38 பேர் COVID-19-ஆல் இதுவரையில் இறந்துள்ளனர்.

இதேவேளை, உலகம் முழுவதும் பரவும் தொற்றுநோயாக COVID-19-ஐ நேற்று  உலக சுகாதார ஸ்தாபனம் வகைப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தடுப்பு மருந்து இல்லா விட்டால் குடித் தொகையின் 60 சதவீதம் தொடக்கம் 70 சதவீதமானோர் COVID-19-ஆல் பீடிக்கப்படுவர் என ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருந்தகங்கள், உணவகங்கள் தவிர அனைத்துக் கடைகளையும் நேற்று முன்தினம் இத்தாலி மூடியுள்ளது. இத்தாலியில் COVID-19-ஆல் 827 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12,462 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்றைய முடிவில் 3,169ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதவிர, தற்போது சீனாவில் மொத்தமாக 80,793 COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, ஈரானில் COVID-19-ஆல் 9,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 354 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தென்கொரியாவில் நேற்றைய முடிவில் 7,869 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 66ஆக உயர்ந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X