2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ்லாந்தில் சாம்பல் புகை; பிரிட்டிஷின் விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல்

Super User   / 2010 மே 17 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்தில் ஏற்பட்டிருக்கும்  எரிமலைக் குமுறலால்  கக்கிய சாம்பல்ப் புகை மூட்டம் காரணமாக பிரிட்டிஷின் இரண்டு விமான நிலையங்கள் இன்று அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளன.

பிரிட்டிஷிலுள்ள ஹித்ரோ விமான நிலையமும், கட்விக் விமான நிலையமுமே இவ்வாறு  மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயணிகள் அனைவரும் தமது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு புறப்பட முன்னராக விமானசேவைகள் இடம்பெறுவது தொடர்பில் உறுதிசெய்யுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

ஐஸ்லாந்தில் ஏற்பட்டிருக்கும்  எரிமலைக் குமுறலால்  கக்கிய சாம்பல்ப் புகை மூட்டம் பிரிட்டிஷின் வடமேற்கு பிராந்தியத்தை நோக்கி வருகின்ற நிலையில் பிரிட்டிஷுக்கான விமானசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்து எரிமலை கடந்த 13ஆம் திகதி  குமுற ஆரம்பித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--