2021 மே 15, சனிக்கிழமை

ஐ.நா.வில் பலஸ்தீனக் கொடியேறியது

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றில் முதன்முறையாக, பலஸ்தீனத்தின் தேசியக் கொடி நேற்றுப் புதன்கிழமை ஏற்றப்பட்டது.

இந்தத் தினம், மிகவும் உணர்வுபூர்வமானதும் பெருமைக்குரியதுமான தினமென, பலஸ்தீனப் பிரதமர் மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்தார்.

இந்தக் கொடியை ஏற்றுவதற்கான விவாதம், இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்தத் தீர்மானத்துக்கெதிராக இஸ்ரேல் விமர்சனங்களை வெளிப்படுததியிருந்ததோடு, ஐக்கிய அமெரிக்கா உட்பட 6 நாடுகள், அத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்தீர்மானத்துக்கு ஆதரவாக 119 வாக்குகள் கிடைக்கப்பெற்ற அதேவேளை, இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்வதிலிருந்து 45 நாடுகள் தவிர்த்திருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .