2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கொரிய இணக்கப்பாட்டை வரவேற்கிறார் ட்ரம்ப்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் சந்திப்புகளின் விளைவாக, நேற்று (19) எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை, “மிகவும் ஆர்வமூட்டுகின்றவை” என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.

அணுவாயுதத் தளங்களில் சோதனைக்கான வாய்ப்பு, ஏவுகணைச் சோதனைத் தளத்தையும் ஏவல் தளத்தையும் அழித்தல், சர்வதேச நிபுணர்களின் பிரசன்னம் போன்ற விடயங்களைக் குறிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அவை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அதேபோல், இக்காலகட்டத்தில், அணுவாயுத அல்லது றொக்கெட் சோதனைகள் இடம்பெறாது எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கொரியப் போரில் கொல்லப்பட்ட, ஐ.அமெரிக்கப் படையினரின் உடல் எச்சங்கள், ஐ.அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டமையை ஞாபகமூட்டிய அவர், அவை தொடர்ந்தும் நாட்டுக்குக் கொண்டுவரப்படுமெனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--