Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை
Nirshan Ramanujam / 2017 ஜூலை 20 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் இதுவரை உற்பத்தியாகியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் 91 வீதமானவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படவில்லை என ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படாத பிளாஸ்டிக் பொருட்களால் உலகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் ஜென்னா ஜெம்பெக் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்கள் உக்குவதற்கு சுமார் 400 ஆண்டுகாலம் எடுப்பதாகவும் சில பொருட்கள் உக்குவதேயில்லை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழக்கும் பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரிழனங்களின் உடல்களிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பெறப்பட்டதாகவும் அவை மரணிப்பதற்கு குறித்த பிளாஸ்டிக் வகைகளே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் இதுவரை 8.3 பில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 6.3 பில்லியன் மெட்ரிக் தொன் கழிவுகளாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடருமானால் 2050 ஆம் ஆண்டளவில் 12 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உக்காத நிலையில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவை, நிவ்யோர்க் எம்பயர் அரச கட்டடத்தை விட 35000 மடங்கு கூடுதலாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(எம்பயர் அரச கட்டடம் 102 மாடி அடுக்குகள் கொண்டதாகும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago