2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கொங்கோ மீள் தேர்தலில் ஜனாதிபதி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாவது சுற்று ஜனாதிபதித் தேர்தல்களில் அறுபது சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதன் மூலம், தனது முப்பத்திரண்டு ஆட்சியை கொங்கோ ஜனாதிபதி டெனிஸ் சஸோ குவெஸ்ஸோ நீடித்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற தேர்தல்களையடுத்து, கொங்கோவில் தொடர்பாடல் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (24), உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளை உள்துறை அமைச்சர் ரேமண்ட் ஸெப்றின் மபுளூ அறிவித்திருந்தார்.

உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, கை-பிறைஸ் பரஃபைட் கொலேலாஸ், பதினைந்து சதவீதமான வாக்குகளையும் ஜெனரல் ஜீன்-மேரி மைக்கல் பதின்நான்கு சதவீதத்துக்கு சிறிது குறைவாகவும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

கொங்கோ குடியரசின் தேர்தல் ஆணைக்குழுவால் கடந்த புதன்கிழமை (23) வெளியிடப்பட்ட பகுதியளவிலான தேர்தல் முடிவுகளில், 67 சதவீதமான வாக்குகளை ஜனாதிபதி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவரும் இம்முடிவுகளை நிராகரித்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .