2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

காம்பியாவில் தேர்தல் முடிவினை ஏற்கச் செய்யும் முயற்சி தோல்வி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காம்பியாவில் ஆழமாகிக்கொண்டு போகும் அரசியல் நெருக்கடியினை நிறுத்தும் பொருட்டு, அந்நாட்டின் ஜனாதிபதி யாஹியா ஜெம்மாவை தேர்தல் முடிவினை ஏற்கச் செய்யும் மேற்கு ஆபிரிக்கத் தலைவர்களின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், இம்மாதம் முதலாம் திகதி ஜெம்மா தோல்வியடைந்தமைமையை, அவரின் ஆளுங்கட்சி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று  (13) சவாலுக்குட்படுத்தியுள்ளது.
இதேவேளை, பிராந்திய அமைப்பான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தினை பிரதிநிதித்துவப்படும் இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தைக்காக காம்பியாவைச் சென்றடைய சில மணி நேரங்களுக்கு முன்னர், தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையகத்தை கைப்பற்றிய படைவீரர்கள், அதற்கு முத்திரையிட்டுள்ளனர்.

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற பதவிக் கவிழ்ப்பொன்றின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜெம்மா, அன்று முதல் காம்பியாவை ஆட்சி செய்து வருகிறார். ஜெம்மா மீது பரந்தளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில், தனது பிரதான போட்டியாளரான அடமா பரோவிடம் தோல்வியடைந்தமையை ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும், கடந்த வெள்ளிக்கிழமை (09) குத்துக்கரணமடித்த ஜெம்மா, தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்தார். இதனையடுத்து, சர்வதேச ரீதியாக எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தார்.

நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, சியர்ரா லியோன் ஜனாதிபதி ஏர்னஸ்ட் பாய் கொரமா, கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியுற்று, தோல்வியை ஏற்றுக் கொண்ட கானாவின் ஜனாதிபதி ஜோன் மஹாமா உள்ளடங்கலான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் இராஜதந்திரிகளுக்கு சமாதானத்துக்கான நொபெல் பரிசை வென்ற லைபீரிய ஜனாதிபதி எலென் ஜோன்சன் சேர்லீப் தலைமை தாங்கியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதிகள் காம்பியாவை விட்டு வெளியேறத் தயாரானபோது கருத்துத் தெரிவித்த ஜோன்சன் சேர்லீப், "இணக்கத்துக்கான நேரம் இதுவல்ல. ஒரு நாளில் நடக்கும் விடயம் இதுவல்ல. நாங்கள் பணியாற்ற வேண்டிய விடம் இது. என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .