Menaka Mookandi / 2016 மார்ச் 31 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கொல்கத்தா நகரில் மேம்பாலமொன்று இடிந்து விழுந்ததில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பாலமே உடைந்து விழுந்துள்ளது. இனால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த பாலமானது இன்று திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதும் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்து உள்ளது. பாலம் இடிந்து விழுந்த பகுதிக்கு அம்பியூலன்ஸ்களும் அனுப்பட்டு உள்ளன. பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவிசெய்து வருகின்றனர்.
மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் செய்தியாளர்களிடம், 'பாலம் இடிந்து விழுந்துவிட்டது, சுமார் 150 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார். பாலம் இடிந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
8 hours ago
9 hours ago
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
08 Nov 2025