Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலத்த மழை, திடீரென்று ஏற்பட்ட வெள்ளங்களால் சூடானில் 62 பேர் கொல்லப்பட்டதாகவும், 98 பேர் காயமடைந்துள்ளதாகவும் உத்தியோகபூர்வ சுனா செய்தி முகவரகம் நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஆரம்பம் முதல் பருவகால மழைகளால் சூடான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சூடானின் தலைநகர் கார்டூம் உள்ளடங்கலாக 15 மாநிலங்களிலுள்ள ஏறத்தாழ 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் சூடானிலுள்ள வெள்ளை நைல் மாநிலமே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நைல் நதியில் வெள்ளமானது தற்போதும் மிகப் பெரிய பிரச்சினையாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி சுனா தெரிவித்துள்ளது.
பலத்த மழைகளால் 54 பேர் இறந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் கூறியிருந்தது.
நெருக்கடி பதிலளிப்பில் தமது பங்காளரான அரசாங்க அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி 37,000க்கு மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாக அல்லது சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மேலும் தெரிவித்திருந்தது.
இதேவேளை, மேலும் திடீரென வெள்ளங்கள் ஏற்படும் அதிக வாய்ப்புகள் குறித்து மனிதாபிமானப் பணியாளர்கள் அச்சப்படுவதாகக் கூறியிருந்த ஐக்கிய நாடுகள், இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மழைப் பருவகாலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago