Freelancer / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கொள்முதல் தொடர்பாக வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையை மூடிமறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09), லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் கணக்காய்வு அறிக்கை தொடர்பான விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு 2025-2026 காலப்பகுதியில் நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்ட செயல்முறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற மரபின்படி, ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு அதன் நகல்கள் வழங்கப்பட்ட பின்னர், அதனுடன் பழைய கொள்முதல் தரவுகளை இணைத்து புதிய விடயங்களைச் சேர்ப்பது முறையானதல்ல.
முந்தைய கொள்முதல் விவகாரங்கள் குறித்து ஆராய்வது அவசியமானதுதான். ஆனால், தற்போதுள்ள கணக்காய்வு அறிக்கையுடன் மேலதிக விடயங்களைச் சேர்த்து, 'கோப்' (COPE) குழுவின் ஊடாகப் புதிய அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாராகி வருகின்றனர். அந்தந்தக் காலகட்டங்களில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முறையான ஆய்வை மேற்கொண்டு, அந்த அறிக்கைகளைத் தனியாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், அது கணக்காய்வாளர் நாயகத்தின் சுயாதீனச் செயற்பாட்டிற்கு விடுக்கும் சவாலாக அமைவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும்.
பொறுப்புக்கூறல் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில், முந்தைய விவகாரங்கள் குறித்து முறையான விசாரணையை மேற்கொண்டு, அதனைத் தனி அறிக்கையாகச் சமர்ப்பியுங்கள். அதனை விசேட கணக்காய்வு அறிக்கையுடன் இணைக்கக் கூடாது. இத்தகைய முறையற்ற செயல்களுக்கு எனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்கின்றேன்" என்றார்.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago