Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களையும் தடைகளையும் மீறுகின்ற காரணத்தால், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமுல்படுத்துவதில், சீனா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது.
ஆனால், வடகொரியாவின் மிகப்பெரிய நட்பு நாடான சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான வர்த்தகம், ஜனவரி தொடக்கம் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், 10.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி, 29.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
ஆனால் கருத்துத் தெரிவித்த சீன சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹுவாங் சொங்பிங், வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா தடைகளை, தாம் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தார்.
"சாதாரண தரவுகளைக் கொண்டு, ஐ.நா தடைகளை அமுல்படுத்துவதில் சீனா கடைப்பிடிக்கும் நடைமுறையைக் கணிக்க முடியாது" என்று தெரிவித்த அவர், வடகொரியாவிலிருந்து தமது நாட்டுக்கான இறக்குமதி, 13.2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். அத்தோடு, மார்ச் மாதத்திலிருந்து, ஒவ்வொரு மாதமும், வர்த்தகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐ.நாவின் தடை, ஒட்டுமொத்தமான தடை கிடையாது எனக் குறிப்பிட்ட அவர், வாழ்வாதாரப் பொருட்கள் பற்றிய கவனம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025