Gopikrishna Kanagalingam / 2017 மே 21 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வு முகவராண்மையை (சி.ஐ.ஏ) சேர்ந்த 18 தொடக்கம் 20 தகவல் மூலங்களை, 2010ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், சீனா கொன்றது அல்லது சிறைவைத்தது என, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலைமைக்கு, சி.ஐ.ஏ அமைப்புக்குள் காணப்பட்ட உளவாளியொருவர், தகவல் மூலங்களைக் காட்டிக் கொடுத்தாரா அல்லது சி.ஐ.ஏ-இன் இரகசியத் தொடர்பாடல் கட்டமைப்பை, சீனா உடைத்து, உள்நுழைந்ததா என்பது தொடர்பில், அதிகாரிகளுக்கிடையில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டு வந்த தகவல் மூலக் கட்டமைப்பை, பல தகவல் மூலங்களைக் கொல்வதன் மூலம், சீனா இல்லாது செய்ததாக அறிவிக்கப்படுகிறது.
இதிலொருவர், அரச கட்டடமொன்றுக்கு முன்னால் வைத்து, சுட்டுக் கொல்லப்பட்டார். இது, ஐ.அமெரிக்காவுக்காகப் பணியாற்றும் ஏனையோருக்கான எச்சரிக்கைக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்று கருதப்படுகிறது.
தொடர்ச்சியாக, அதிகமான புலனாய்வுத் தகவல் மூலங்கள் கொல்லப்பட, அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றும், 2013ஆம் ஆண்டில், தகவல்கள் மூலங்களை அடையாளங்காணும் சீனாவின் திறன், கட்டுப்படுத்தப்பட்டது எனவும் அறிவிக்கப்படுகிறது.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago