Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 31 , மு.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட இந்தியப் பிரஜை குல்பூஷண் ஜாதவ், இந்தியாவுக்கான முக்கிய புலனாய்வு அதிகாரியாகச் செயற்பட்டு, பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற ஆயுததாரிகளின் தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கி வந்ததாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக, புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், சர்வதேச நீதிமன்றத்தில், பாகிஸ்தானுக்கு சார்பாக அது இருக்கும் என்றும், பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தெரிவித்த, பாகிஸ்தானின் வெளிவிவகார அலுவலகத்தின் பேச்சாளர், ஜாதவ் மூலம் என்ன தகவல்கள் வழங்கப்பட்டன என்பது தொடர்பாக குறிப்பிடுவதற்கு மறுத்துள்ளார். மேலும், ஜாதவ், ஓர் உளவாளியாகவே பணியாற்றினார் என்பதற்கான முழுமையான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அந்த ஆதாரம், ஜாதவ் தொடர்புடைய வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது சமர்ப்பிக்கப்படும் என்றும், பாகிஸ்தானின் சட்டமா அதிபர் அஷ்டார் ஆசாப் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதாரத்தை, கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையின் போது ஏன் சமர்க்கவில்லை என்று வினவியபோது, சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவிருந்த உத்தரவை, தான் ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததாக, சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago