2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மாரடைப்பால் மரணம்

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர்  எம்.எல்.ஏவுமான சுதர்சனம் நேற்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

67 வயதான சுதர்சனம், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இவரின் மறைவு தகவல் கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விரைந்து சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டர் முதல் சட்டமன்ற தலைவர் வரை பதவி வகித்துள்ளார்.

சுதர்சனத்தின் மறைவால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளதாக அக்கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--