Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 28 , பி.ப. 11:22 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரேசா மேயின் கட்சிக்கு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காணப்பட்ட முன்னிலை, வலுவாகக் குறைவடைந்துள்ளது. எனவே, ஜூன் 8ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல், மிக இறுக்கமானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர், இந்தத் தேர்தலை மே அறிவித்த போது, மிகப்பெரிய வித்தியாசத்தில் அவர் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து வந்த காலங்களில், அவருக்கான ஆதரவு, குறைவடைந்து வந்தது.
கடந்த வாரம், மன்செஸ்டரில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, தேர்தல் நிலைவரம், எவ்வாறு அமையுமென்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில், 5 கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையிலான வித்தியாசம், வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
தற்போதுள்ள நிலைமையின்படி, ஆளுங்கட்சி, வெறுமனே 2 தொடக்கம் 6 சதவீதமான அளவிலேயே முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலையில், பிரதமர் மேயின் கட்சியே வெல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், கருத்துக்கணிப்புகள் இவ்வளவு தூரம் இறுக்கமடைந்துள்ளமை, ஆளுங்கட்சிக்கான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு முன்பாக, தனது ஆளுங்கட்சியின் பலத்தை அதிகரிப்பதற்காகவே தேர்தலைக் கோரிய பிரதமர் மே, முன்னைய பிரதமராக இருந்த டேவிட் கமரோனின் கீழ் பெறப்பட்ட, 12 ஆசனங்கள் கொண்ட பெரும்பான்மையைப் பெறாவிட்டால், அவரது நோக்கம், பிழைத்து விட்டதாகவே மாறுமென்பது குறிப்பிடத்தக்கது.
Inpanathan Monday, 29 May 2017 12:00 PM
இலங்கையில் இருந்து உயிர்ப் பிச்சை கேட்டு அடைக்கலம் புகுந்த என்னைப் போன்றவர்களை விசாரணை என்னும் போர்வையில் விசாரணை முடிந்தும் எங்களுக்கு எந்த விதமான பதிலையும் தராமல் ,எங்களை மன நோய்க்கு (மன அழுத்தத்திற்கு ) உள்ளாக்கி எங்களை குடும்பத்துடன் சந்தோசமாக வாழ விடாமல் சித்திரவதை செய்யும் தற்போதைய பிரதமர் தெராமே வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .